சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்குனராக அறிமுகமான ‘பீட்சா’ படத்தில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதன் பின் ‘இறைவி’ படத்திலும் நடித்தார்.
இப்போது ரஜினிகாந்த் நடிக்க அவர் இயக்க உள்ள படத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கிறார்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை.
விஜய் சேதுபதி ஏற்கெனவே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘சை ரா’ படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரஜினியுடனும் நடிக்கப் போகிறார்.