ரசிகர்கள் விரும்பும் ‘வசந்தம்’

     சைஞானி இளையராஜாவின் இசை, கௌதம் மேனனின் இயக்கம், ஜீவா, சமந்தா என்ற புது காம்பினேஷன், சந்தானத்தின் நகைச்சுவை, இப்படி பல விஷயங்கள், நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை தந்தவை.

அந்த எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்களின் ஆவலை மிகுதியாக்கியுள்ளது. இந்த வாரம் முழுவதும் இப்படத்திற்காக திரையரங்குகளில் புக்கிங் செய்யப்பட்டு விட்டது.

டிசம்பர் 14  முதல் வெளிவர இருக்கும் நீதானே என் பொன்வசந்தம் காதலர் தினத்தை இரண்டு மாதங்கள் முன்னதாகவே கொண்டாட வைத்து விடும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கை.

Read Previous

‘வாள்’ வீசும் அனுஷ்கா

Read Next

10 ஆண்டுகளாக முன்னணியில் த்ரிஷா