சங்கர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் ‘என் காதலி சீன் போடுறா’.
இந்த படத்தில் ‘அங்காடித் தெரு’ மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை, இயக்குகிறார் ராம்சேவா.
‘என் காதலி சீன் போடுறா’ படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது,
“இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள்தான். ஆனால், அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அதிபுத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.
படப்பிடிப்பு சென்னை, பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது,” என்றார் இயக்குனர்.