இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘விஜய் அவார்ட்ஸ்’

தமிழ்த் திரைப்படத் துறையினருக்காக வழங்கப்படும் விருதுகளில் ‘விஜய் அவார்ட்ஸ்’ விருதுகளுக்கும் தனிப் பெயர் உண்டு.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் புதுப் பொலிவுடன் 10வது வருட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மே 26 சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர், நடிகைகளையும் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளது.

இந்த வருட விழாவில் காஜல் அகர்வால், அஞ்சலி, சாயிஷா சைகல், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடனமாட உள்ளார்கள்.

விஜய் விருதுகளுக்கான நடுவர்களாக இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், கே.எஸ். ரவிக்குமார், பாக்யராஜ், யூகி சேது, நடிகை ராதா ஆகியோர் இருக்கிறார்கள்.

நடுவர்களால் வழங்கப்படும் விருதுகளுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அபிமான நடிகர், நடிகை, இயக்குனர், பாடல், பாடம் ஆகியவற்றிற்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுகளை ரசிகர்களும் vijayawards.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்களித்து தேர்வு செய்யலாம்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடந்தாலும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்வைக் காண திரையுலகமும், திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Read Previous

விஜய் டிவி – பிக்பாஸ் சீசன் 2 – முன்னோட்ட வீடியோ

Read Next

‘எழுமின்’ டிரைலர் விழா, ஒரே மேடையில் விஷால், சிம்பு

Most Popular