‘கீரிப்புள்ள’ திரைக்கு வரும் முன்னே திருட்டு சி.டி.

keeripullaயுவன் , திஷா பாண்டே  நடித்து பெரோஸ்கான் இயக்கத்தில், நாளை வெளிவர உள்ள திரைப்படம் ‘கீரிப்புள்ள’.  இந்த படம் திரைக்கு வரும் முன்னரே  திருட்டு VCD மற்றும் சில இணையதளங்களிலும் வெளிவந்துவிட்டது.

அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைம் மூலம் 16  இணையதளங்களில் தடை செய்து விட்டார், அப்படி இருந்தும்  திருட்டு VCD வெளிவந்துவிட்டது.
தொடர்ந்து பெரோஸ்கான் , யுவன், மற்றும் அவரது ரசிகர்கள் மூலமாக எல்லா  ரோட்டு கடைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளை முற்றுகையிட்டு ஆறாயிரம் திருட்டு VCD களை கைப்பற்றி அழித்துவிட்டனர்.
இது பற்றி பெரோஸ்கான் கூறுகையில், “ கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களது உழைப்பையும், பணத்தையும் கஷ்டபடாமல் திருடுகிறார்களே” என்று வேதனையுடன் கூறினார்.

Read Previous

நடிப்பு To இயக்கம் – அம்பிகா

Read Next

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அஜித்