உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அஜித்

ajithஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நடத்த இருக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார்.

இதனால், ஏப்ரல் 1ம் தேதி நடக்க இருந்த அஜித் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பு 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏப்ரல் 1ம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருந்த இந்த புதிய படத்தின் துவக்க விழா 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில் கூட கலந்து கொள்ளாத அஜித்,  இப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள இருப்பது அவருடைய ஆதரவை இலங்கைத் தமிழர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read Previous

‘கீரிப்புள்ள’ திரைக்கு வரும் முன்னே திருட்டு சி.டி.

Read Next

‘உயிருக்கு உயிராக’ காதலை சொல்லும் படம்…