நடிகர்கள் உண்ணாவிரதம் – ரஜினிகாந்த் வந்தார்…

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

சற்று முன் நடிகர் ரஜினிகாந்த் வந்து கலந்து கொண்டுள்ளார்.

nadigar sangam fasting 4_00022

இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மற்ற நடிகர்கள் விவரம்,

நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், பிரசாந்த், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண் விஜய், கே. பாக்யராஜ், நாசர், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர் ஸ்டார், எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார் மன்சூரலிகான், நிழல்கள் ரவி, கணேஷ் வெங்கட்ராமன்,டி.பி. கஜேந்திரன்  தற்போது உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.

தயாரிப்பாளர்  எஸ். தாணு, ஜி. சேகரன், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகைகள் ராதிகா சரத்குமார், ஊர்வசி, அம்பிகா, நளினி, ரேகா கோவை சரளா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னணி ஹீரோயின்கள்  யாரும் இதுவரை கலந்து கொள்ளவில்லை.

Read Previous

நடிகர்கள் உண்ணாவிரதம் – பங்கேற்றுள்ளவர்கள் விவரம்

Read Next

நடிகர் சங்க உண்ணாவிரதம் – சிறப்புச் செய்தி