டைட்டில் வைக்காமலேயே ஒரு ஹீரோவின் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.
அஜித் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன. ஒன்று விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படம், இந்த படத்திற்கு டைட்டில் ‘வலை’ என பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்து விட்டனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான டைட்டில் அறிவிக்கப்படவில்லை.
மற்றொரு படம், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கும் படம். இந்த படத்திற்கு டைட்டில் ‘வெற்றி கொண்டான்’ என வைத்து விட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு படங்களுக்கும் டைட்டில் வைக்காமலே இருந்து வருவதன் காரணம் தெரியவில்லை. ஒரு வேளை டைட்டிலுக்கே ஒரு விழா எடுத்து விளம்பரப்படுத்துவார்களா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுவரை ‘தலை’யின் படங்களுக்கு ‘தலைப்பு’ இல்லாமலே எப்படி செய்திகளை வெளியிடுவது ?