‘நான் கடவுள்’ பூஜா நடிக்கும் ‘விடியும் முன்’

vidiyum mun‘நான் கடவுள்’ படத்தில் நாயகியாக நடித்தற்குப் பிறகு பூஜா வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. நான்கு மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ‘விடியும் முன்’ என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

கயூம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜாவித் கயும் தயாரிக்கும் இந்த படத்தை பாலாஜி குமார் இயக்க, கிரிஷ் இசையமைக்கிறார்.

‘நான் மகான் அல்ல’ புகழ் வினோத் கிஷன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், முத்துகுமார், அமரேந்திரன், மாளவிகா குட்டன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் பாலாஜி கே. குமார் கூறுகையில், “ நான்கு தீய மனிதர்களிடமிருந்து மூன்று வேறுபட்ட காரணங்களுக்காக இரண்டு பெண்கள் , உயிரைப் பணயம் வைத்து தப்பி ஓடும் ஓர் இக்கட்டான நாளில் நடக்கும் சம்பவங்கள்தான் ‘விடியும் முன்’.

சமுதாயத்தின் இருண்ட பக்கங்களையும், மனித வாழ்க்கையின் தடுமாற்றமான தருணங்களையும், சற்றும் நேர்மை குறையாமல் பதிவு செய்திருக்கிறேன்”, என்கிறார்.

ஹாலிவுட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றி , பல விளம்பரப் படங்களை இயக்கியவர் பாலாஜி கே. குமார். இவர் இயக்கிய என்ற ஆங்கிலப் படம் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், பதக்கங்களையும் பெற்றுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு – சத்தியராஜ், கலை – எட்வர்ட்.

விரைவில் வெளிவருகிறது ‘விடியும் முன்’.

 

Read Previous

எதிர் நீச்சல் – விமர்சனம்

Read Next

EPIC – 3D