ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
இந்த படத்தை யுவராஜ் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.
சரித்திர கதை கொண்ட இந்த படத்தில் வடிவேலு, கிருஷ்ண தேவராயராகவும், தெனாலிராமனாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். மற்றும் மனோபாலா, கிருஷ்ணமூர்த்தி, பாலா சிங், நமோ நாராயணன், ஜி.எம். குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிப்பதற்கு பல முன்னணி நடிகைகளை கேட்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் நடிக்க முன் வரவில்லையாம்.
இதைத் தொடர்ந்து ஒரு ஹிந்தி, தெலுங்குப் படத்தில் நடித்த பிரபல மும்பை மாடலான மீனாட்சி தீட்சித்தை நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.