சூர்யா – இயக்குனர் ஹரி கூட்டணியில் தயாராகியுள்ள ‘சிங்கம் 2’ திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது.
சூர்யாவுக்கு தெலுங்கிலும் தனி வரவேற்பு உண்டு. ஏற்கெனவே ‘சிங்கம்’ படத்தின் முதல் பாகம் அங்கு ‘யமுடு’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.
இப்போது ‘சிங்கம் 2’ படமும் வெளியாக உள்ளது. ஆனால் படத்திற்கு ‘யமுடு 2’ என பெயர் வைக்காமல் ‘சிங்கம்’ என்ற பெயரிலேயே வெளியிடுகிறார்கள்.
தெலுங்கில் விரைவில் இப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள்.