“கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா மறைவு என இன்று பிற்பகல் முதல் வதந்தி நிலவியது.
சில தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட, செய்தியாளர்கள் ஒவ்வொருவரும், அது உண்மையா, பொய்யா என மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
கேரளாவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்று செய்திகள் ஏற்கெனவே வெளியாகின. இந்நிலையில் அவரைப் பற்றிய வதந்தி வந்த பின் இன்று கேரளாவிலிருந்து இங்கு விசாரிப்பதும், இங்குள்ளவர்கள் கேரளாவில் இருப்பவர்களிடம் விசாரிப்பதுமாக இருந்தது.
கடைசியில் அது வதந்தி என்று தெரிந்ததும், அனைவரும் அவரவர் வெளியிட்ட செய்திகளை வாபஸ் பெற்றுவிட்டனர்.