தமிழ்ப் படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ…

cricket-player-bravoமேற்கிந்தியத் தீவுகள் அணி கிரிக்கெட் வீரரான டிவெய்ன் பிராவோ ‘உலா’ என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ ஆட ஆரம்பித்த பிறகு, அவர் தமிழக மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

விக்கெட் வீழ்த்தியதும் அவர் ஆடும் நடனம் அனைவரையும் கவர்ந்த ஒன்று. அந்த நடனத்தைப் பார்த்து ‘உலா’ படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ் அவரை படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் நடனமாட வைக்க முடிவு செய்து விட்டார்.

இதற்காக நாளை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுகிறார் பிராவோ.

ராஜன் மாதவ் இதற்கு முன் சேரன், பிரசன்னா நடித்த ‘முரண்’ படத்தை இயக்கியவர்.

பிராவோ கூட  எத்தனை ‘சியர்  லீடர்ஸ்’ நடனம் ஆடறாங்க….

Read Previous

பணமில்லை…போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்…

Read Next

புதிய படங்களில் நடிக்க மாட்டேன் – சமந்தா திடீர் அறிவிப்பு