தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. விரைவில் சூர்யா, விஜய் இருவருக்கும் ஜோடியாகவும் தமிழ்ப் படங்களில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் டிவிட்டரில் சமந்தா ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ‘ஸ்டிரைக்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
“இனி எந்த புதுப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை. எனக்குப் பிடித்தமான சிறந்த கதாபாத்திரம் கொண்ட படங்கள் கிடைக்கும் வரை இந்த முடிவு.
ஏற்கெனவே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களில் நடித்து முடிப்பேன். எனது திறமையை சரியாக வெளிப்படுத்தா விட்டால் என்னை ஒதுக்கி விடுவார்கள், அதனால்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருபவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவின் இந்த திடீர் ‘ஸ்டிரைக்’ முடிவு தெலுங்கானா பிரச்சனையில் அடிக்கடி ‘ஸ்டிரைக்கை’ சந்திக்கும் ஆந்திர மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனைதான்….