“ஒரு விஷயம் முடியாதுன்னு யாராவது சொன்னா, ‘ஏன் முடியாது’ன்னு எனக்குள்ள கேட்டுப் பார்த்துக்குவேன்.”
இப்படி ஒரு இயக்குனர் யோசிச்சதாலதான் இன்னைக்கு சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து ஜோடியாக நடிக்க முடியுது.
அப்படி யோசிச்ச இயக்குனர் பாண்டிராஜ்.
“இந்த படத்தோட டிஸ்கஷன்ல இருக்கும் போதே, ஒரு உதவி இயக்குனர் இந்த கதைக்கு சிம்புவும் நயனும் இருந்தால் எப்படி இருக்கும்னு கேட்டுட்டு அவரே, அதுக்குலாம் சான்ஸே இல்லைன்னு சொன்னார்.
ஏன் சான்ஸ் இல்லைனு எனக்குள்ள ஒரு கேள்வி கேட்டேன். இதோ…இப்ப ரெண்டு பேரும் ஜோடியா நடிக்கிற படத்தை பாதி முடிச்சிட்டேன், ” என்கிறார் பாண்டிராஜ்.
சரி படத்தோட கதைதான் என்ன…
சிம்வுக்கு லவ் ஃபெயிலியர் (பாவம் அவரும் எத்தனை முறைதாங்க ஃபெயில் ஆவாரு). அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சி, கல்யாணம் நடக்கிறதுக்குள்ள கிடைக்கற ஒரு ஆறு மாசத்துல அவங்களுக்குள்ள பூக்கற காதல்தான் படத்தோட கதை. அதனால வர்ற எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பிரச்சனை இதான் படம்.
நயன்தாராவை சிம்பு பார்க்கும் போதெல்லாம் ‘இது நம்ம ஆளு’ன்னு ஒரு ஃபீல் வர்ற மாத்ரி நிறைய சீன் இருக்கம்.
அதனால, படத்துக்கு ‘இது நம்ம ஆளு’ன்னு பேர் வைக்கக் கூட ஐடியா வச்சிருக்காராம் பாண்டிராஜ்.
நயன்தாராவால , சிம்பு தூக்கத்தை தொலைச்சது (!?) பத்தாதுன்னு இப்ப எங்க தூக்கத்தையும் கெடுக்கப் போறீங்க…
நடத்துங்க… சார்… நடத்துங்க….