டேனியல் பாலாஜி இயக்கும் ‘குறோணி’…

Daniel-Balaji

“காக்க காக்க, காதல் கொண்டேன், பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு” போன்ற படங்களில் நடித்தவரும் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும்  ‘வை ராஜா வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவருமான டேனியல் பாலாஜி இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.

விரைவில் வெளிவர இருக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தைத் தயாரித்த மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் எம்.ஆர். கணேஷ் இந்த படத்தைத் தயாரிக்க உள்ளார்.

படத்திற்கு ‘குறோணி’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

வழக்கமான படங்களிலிருந்து இந்த படம் மிகவும் மாறுபட்டிருக்குமாம். ‘வாழ்க்கையில எல்லாமே ஒரு நம்பிக்கைதான்’ என்ற ஒரு வரியை மையமா வச்சி உருவாக்கப்பட்டதுதான் இந்த கதை.

இயக்கத்தோடு டேனியல் பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

சரி..‘குறோணி’ன்னா என்ன….?

“அய்யாவழி புராண வரலாற்றின் படி உலகில் உயிரியல் தோற்றத்துக்கான மூலமாகவும் தீமையின் மொத்த உருவமாகவும் தோன்றிய முதல் அசுரனே ‘குறோணி’. இவன் அகிலத்தில் கூறப்பட்டுள்ள எட்டு யுகங்களில் முதல் யுகமான நீடிய யுகத்தில் தோன்றியவன்.”

படத்தோட பேரே வித்தியாசமா இருக்கு, படமும் வித்தியாசமா இருக்க வாழ்த்துகள்…

Read Previous

சிம்பு – நயன்தாரா புது காதல் கதை…

Read Next

வெற்றிக்குக் காரணம் அஜித் சார் – பரதன்

Most Popular