காதலும் ‘தொட்டால் தொடரும்’…

thottal thodarum press meet_00016

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர்  தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ள படம் ‘தொட்டால் தொடரும்.‘

தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன், அம்மு,  ரஞ்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கேபிள் சங்கர்,

“ இது ஒரு லவ் ஆக்ஷன் த்ரில்லர் முதல் பாதி லவ் ரொமான்ஸ் என்றும் மறுபாதி ஆக்ஷன் என்றும் இரண்டுவித நிறத்தில் இருக்கும். ஐடி.யில் எச்ஆராக இருக்கும் ஒருவனுக்கும் கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் உள்ள காதல், அதிலுள்ள பிரச்சினைகள்தான் கதை.

முந்தைய படங்களின் வெற்றியைப் பார்க்காமல் அதில் அவர்கள் காட்டியுள்ள திறமையை மட்டும் பார்த்து நடிகர்களையும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்து படம் உருவாகியுள்ளது.

எல்லாரும் முழு சுதந்திரத்துடன் இயங்க முடிந்த படம். எல்லா வகையிலும் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக் கொண்ட இந்த துவார் ஜி. சந்திரசேகரைப் போல தயாரிப்பாளர் கிடைப்பது அபூர்வம். கதை, காட்சிக்காக செலவைப் பார்க்காதவர். முந்தைய படம் பற்றி யோசிக்காமல் செய்கிற படத்தை மட்டும் யோசிப்பவர் அவர்.

காமமும், வன்மமும் மட்டுமே தொட்டால் தொடரும் என்பதில்லை. அன்பு, பாசம், காதல் இவையெல்லாம் கூட தொட்டால் தொடரும்,” என்றார்.

நன்றியுரையாற்றிய தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் ‘‘ஐந்து படங்கள் தயாரிக்கிறேன். தகுதியான திறமையுள்ள பத்திரிகையாளர்களுக்குப் படவாய்ப்பு தருவேன்‘‘ என்றார் .

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சிவன், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங், நடிகை அருந்ததி, கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி, எடிட்டர் சாய் அருண், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி,வெற்றி, நடிகர்கள் விஜய் ஆனந்த், சிங்கப்பூர் துரைராஜ்,  ஸ்டண்ட் மாஸ்டர் நாக் அவுட் நந்தா ஆகியோரும் பேசினார்கள்.

 

Read Previous

வெற்றிக்குக் காரணம் அஜித் சார் – பரதன்

Read Next

யார் யாரோ விமர்சனம் எழுதுறாங்க – ஒரு ஒளிப்பதிவாளரின் எரிச்சல்…