‘கங்காரு’ படம் எனக்கு ஒரு ‘பாச மலர்’ – ஸ்ரீபிரியங்கா

kangaroo sri priyanka‘கங்காரு’ படத்தில் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறார் ஸ்ரீபிரியங்கா. இவர் கின்னஸ் சாதனைப் படமான ‘அகடம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

அது மட்டுமல்ல தமிழ் பேசத் தெரிந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்.

‘கங்காரு’ படம் பற்றிய அவரது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘கங்காரு’ படம் அண்ணன், தங்கை பாசம் பற்றிய படம். என் மீது பாசமுள்ள அண்ணன். அவரை ஊரில் எல்லாரும் ‘கங்காரு’ என்றுதான்  அழைப்பார்கள். அந்த கங்காரு பாசத்துடன் தூக்கிச் சுமக்கும் தங்கைதான் நான்.

என்  அண்ணன் ஊருக்கே அடங்காத முரட்டு கங்காரு,  தன் தங்கையின் வார்த்தைக்கு மட்டும் அடங்கும். எங்களுக்குள் நடக்கும் பாசமுள்ள சம்பவங்கள் தான் கதை. எனக்கு இரண்டு பாடல்கள் காதல் டூயட்டும் உண்டு அண்ணனுடன் பாசப் பாட்டும் உண்டு.

அண்ணன் தங்கை பாசம் என்றால் இன்றும் ஒரே முன் மாதிரி ‘பாசமலர்’ படம்தான். அதில் சாவித்திரியம்மா பாசமுள்ள தங்கையாக வாழ்ந்திருப்பார். அவரும் பெரிய கதாநாயகிதான். இருந்தாலும் அந்த தங்கை பாத்திரம் மூலம் எல்லார் மனதிலும் அழுத்தமாக உட்கார்ந்து விட்டார். அதே போல இந்தப் படமும் எனக்கு அமையும் “

“கங்காரு படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். என் கேரக்டரும் பிடிக்கும். ஒவ்வொரு கதாநாயகிக்கும் இப்படிப்பட்ட தங்கையாக நடிக்க ஆசை வரும். ” என்கிறார் ஸ்ரீபிரியங்கா.

தமிழ்ப் பெண்ணாச்சே, பேசக் கத்துக் கொடுக்கணுமா என்ன ?

Read Previous

புகழை விட வெற்றிதான் முக்கியம் – சுஜா வருணி

Read Next

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்