I love you – என்பது ‘மூணே மூணு வார்த்தை’ , I hate you – ‘ மூணே மூணு வார்த்தைதான் ‘ , How are you – என்பதும் மூணே மூணு வார்த்தைதான் ‘.
இப்படிப்பட்ட ஒரு தலைப்பு , இந்த படம் காதலைக் குறிப்பிடும் படமாக இருக்குமோ என்ற ஆர்வத்தை நமக்கு உருவாக்குகிறது.
கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் படம்தான் இந்த ‘மூணே மூணு வார்த்தை ‘.
“வல்லமை ராராயோ, கொலயா கொலயா முந்திரிக்கா,” ஆகிய படங்களைத் தொடர்ந்து பெண் இயக்குனரான மதுமிதா இயக்கும் மூணாவது படம்தான் ‘மூணே மூணு வார்த்தை’.
காதல் கலந்த நகைச்சுவை படமான இந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் சிதம்பரம் அறிமுகம் ஆகிறார். ‘சுட்ட கதை, இரண்டாம் உலகம்’ படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார் . ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகம் ஆகிறார் .
இந்த இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லட்சுமி தங்களது அனுபவத்தை ஒருங்கிணைத்து நடிக்கின்றனர். மூன்று தலைமுறையாக நடித்து கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற லட்சுமி பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார்.
பல்வேறு திறைமையான தொழில் நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் இந்த படத்திலும் அந்த பணியை தொடர்கிறது .
கார்த்திகேய முர்த்தி இசை அமைப்பாளராகவும், மணி கார்த்திக் கலை இயக்குனராகவும், கிரண் கண்டி பட தொகுப்பாளராகவும், பிரபல ஒளிப்பதிவாளர் P.S.வினோத்தின் உதவியாளர் ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகின்றனர்.
‘ஆஹா கல்யணம் ‘ படத்தின் மூலம் ஊடங்கங்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ராஜீவ் ராஜாராம் இந்த படத்தில் ஜம்போ என்ற மற்றொரு வசனகர்த்தாவுடன் இணைந்து வசனம் எழுதுகிறார். இந்த ஜோடி பல்வேறு விளம்பரங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது .
விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.