கோவையைச் சேர்ந்த வினோத் கம்லின், அவரது நண்பர்கள் குழுவுடன் இணைந்து உருவாக்கியுள்ள குறும்படம் ‘கனவு’.
பெட்ரோமாக்ஸ் லைட் பிக்சர்ஸ் சம்னக்ரிஷ் தயாரிப்பில், வினோத் கம்லின் இயக்கியுள்ள இந்த குறும்படத்திற்கு அஷ்வாத்தமன் இசையமைத்துள்ளார்.
பிரவீண், அஷ்வாத்தமன், அனிதா, வினித், சரவணன், மகிழினி, முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த ‘கனவு’ குறும்படத் திரையிடல் விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், இயக்குனர் கே.எஸ். தங்கசாமி, நடிகர் அசோக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘கனவு’ குழுவினரை வாழ்த்திப் பேசினர்.
திரைப்படங்களுக்கு இணையான தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படத்தை முழு நீள திரைப்படமாக தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
‘கனவு’ குறும்பட டிரைலர் …