தயாநிதி அழகிரி தயாரிப்பில் சரவணராஜன் இயக்கத்தில் ஜெய், சுவாமி மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘வடகறி’.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், கடந்த வருடமே ஒப்புக் கொண்ட சில படங்களின் வேலைகள் பிஸியாக நடந்து கொண்டிருப்பதால், யுவன் ‘வடகறி’ படத்தின் இசையமைப்பு வேலைகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக இசையமைப்பாளர் அனிருத் சிபாரிசு விவேக் சிவா, மெர்லின் சாலமன் ஆகிய இருவரும் படத்திற்கு புதிய இசையமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.ங
முறையே 22, 23 வயதே ஆன இந்த இளம் இசையமைப்பாளர்கள், ஆஸ்கர் நாயகன் தேர்வு செய்த ‘சின்க்ஸ்’ இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
விவேக் சிவா , மெர்லின் சாலமன் இருவரும் இணைந்து ‘வடகறி’ படத்திற்காக 4 பாடல்களை பதிவு செய்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசையையும் இவர்கள்தான் செய்யப் போகிறார்கள்.
யுவன் ஏற்கெனவே இசையமைத்துக் கொடுத்த அழகான ஒரு மெலடி பாடலும் இந்த படத்தில் இடம் பெறுகிறது.
படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனமும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வடகறி’க்குப் பொருத்தமாக இனி ‘செட்’ தோசை…