‘கோச்சடையான்’ - மே 16ல் ரிலீஸ்...?
26 Mar 2014
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
‘கோச்சடையான்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் வட்டாரமும் முனைப்புடன் உள்ளனர்.
‘கோச்சடையான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜெயா டிவியில் மார்ச் 30ம் தேதி ஞாயிறு , காலை 10 முதல் 1 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்தின் பிரத்யேக பேட்டியும் இடம் பெறும் எனத் தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது ஜெயா டிவியில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகைச்சுவை நடிகர் விவேக், ரஜினிகாந்தை பேட்டி காணுகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்தின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால், தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகப் பெரிய ‘ஹிட்’ ஆக அந்த நிகழ்ச்சி அமையும் என்று சொல்லாம்.