அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த ‘கூலி’
14 Aug 2025
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியான படம் ‘கூலி’. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது.
அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் வசூலிக்காத அளவிற்கு பிரிமியர் காட்சிகளுக்கான வசூலைப் பெற்றுள்ளது.
3,042,756 அமெரிக்க டாலரை பிரிமியர் காட்சிகளின் மூலம் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 25,52,87,228 ரூபாய். இது அதிக வசூலைப் பெற்ற இந்தியப் படங்களில் 4வது இடம்.
பிரிமியர் மற்றும் முதல் நாள் வசூலாக 4 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற வெளிநாடுகளிலும் சாதனை வசூலைப் பெற்று வருவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: coolie, rajinikanth