ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத் தலைப்பு ‘கத்தி’...
26 Mar 2014
அன்று ‘துப்பாக்கி’...இன்று ‘கத்தி’....ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்றும் படத்திற்கு ‘கத்தி’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இது பற்றிய அறிவிப்பை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே வெளியிட்டுள்ளார்.
‘துப்பாக்கி’ படத்தின் வெற்றி மிகவும் பேசப்பட்ட ஒன்று. அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றும் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானாலும் படத்திற்கு என்ன தலைப்பு என்பதை அறிவிக்கவில்லை.
சற்று முன்னர் இந்த படத்திற்கு ‘கத்தி’ என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
இன்று முழுவதும் அனைவரும் ‘கத்தி’, ‘கத்தி’யே பேசுவார்கள்...