4 நாளில் 400 கோடி வசூல் கடந்த ‘கூலி’

18 Aug 2025

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாகிர், சத்யராஜ், உபேந்திரா, சிறப்புத் தோற்றத்தில் அமிர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கூலி’.

முதல் நாளில் 151 கோடி வசூலித்து உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற புதிய சாதனையைப் படைத்தது.

தற்போது அடுத்த சாதனையாக நான்கே நாட்களில் 404 கோடி வசூலித்துள்ளது. 

இன்று திங்கள் கிழமை வார நாள் என்றாலும் படத்திற்கான வரவேற்பு அப்படியே உள்ளது. வரும் நாட்களிலும் இப்படம் இன்னும் அதிகம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தனது 75 வயதில் ரஜினிகாந்த் இப்படி ஒரு வசூல் சாதனையைப் படைப்பதை இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

Tags: coolie, rajinikanth, anirudh, lokesh kanagaraj

Share via: