அஜித் புதிய படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ?

ajith-and-anushka‘வீரம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தததே.

இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படாமலே இருக்கிறது. கடந்த சில தினங்களாக மீடியாக்களில் சில பேரைச்  சொல்வதும், பின்னர் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவிப்பதுமாகவே இருந்து வருகிறது.

இதனால், நேற்று இப்படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டனர். வரும் ஏப்ரல் 9ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக அறிவித்தனர். மற்ற நடிக, நடிகையர்களின் விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அஜித் ஜோடியாக அனுஷ்காதான் நடிக்கப் போகிறார் என ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள், அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது, அஜித் ஜோடியாக மேலும் ஒரு நடிகை நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, அஜித்துக்கு இந்த படத்தில் இரண்டு ஜோடிகள். ஒருவர் அனுஷ்கா, மற்றொருவர் ஒரு முன்னணி நடிகை. அதற்கான தேடல் ஆரம்பமாகிவிட்டது. அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.

இப்போதே பல முன்னணி ஹீரோயின்கள் அதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி ? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Read Previous

கொலை மிரட்டல் – இயக்குனர் மீது நடிகை சுஜிபாலா புகார்…

Read Next

மான் கராத்தே – விமர்சனம்