சந்தானம் பட விழாவில் ஷங்கர், ராஜமௌலி

santhanam in VPAசந்தானம் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.

‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி இயக்கி 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக்தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.

பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், ‘முத்திரை’ என்ற படத்தையும் இயக்கிய ஸ்ரீநாத் இந்த படத்தை இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

சந்தானம் ஜோடியாக அஷ்னா சவேரி  நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கு தெலுங்குப் படத்தை இயக்கிய ராஜமௌலியும், தமிழின் பிரம்மாண்டமான இயக்குனரான ஷங்கரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

பொதுவாக, தான் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் எந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கோ, பத்திரிகையாளர் சந்திப்புக்கோ வராத சந்தானம், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கண்டிப்பாக வந்துதானே ஆக வேண்டும்.

தான் ஹீரோவாக நடிக்கிற படத்தைப் பத்தி அதிகம் கவலைப்படற சந்தானம், மத்தவங்க ஹீரோவா நடிக்கிற படத்தோட விழாவுக்கு வராம இருக்கிறது பல முன்னணி ஹீரோக்களை எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாம்.

புல்லும் ஒரு நாள் ஆயுதம் ஆகலாம், ஆயுதமும் ஒரு நாள் புல்லாகலாம்.

சந்தானத்துக்கு புரிஞ்சால் சரி…

Read Previous

வடிவேலுவை மிரட்டுவதா… – சீமான் கடும் எச்சரிக்கை

Read Next

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – விமர்சனம்

Most Popular