காதல் ரகசியங்களை அவிழ்த்துவிடும் பார்த்திபன்…!!

parthiban and amala paulமீடியாக்களில் நேற்று முதல் திரையுலகம் சம்பந்தமான பரபரப்பு செய்தி என்றால் அது அமலா பால் – இயக்குனர் விஜய் திருமணம் பற்றியதுதான்.

ரொம்ப நாட்களாகவே அவர்களிவருக்கும் இடையே காதல் என்பது கிசுகிசுவாக அடிபட்டாலும், வழக்கம் போலவே அந்த கிசுகிசுவுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்கள் காதல் ஜோடிகள்.

இப்படி திரையுலகில் நடக்கும் கிசுகிசுக்களை பத்திரிகையாளர்களை விட மிகவும் சுவாரசியமாக அவிழ்த்துவிடுபவர் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.

எந்த இசை வெளியீட்டு விழாவிலோ அல்லது திரைப்படம் சம்பந்தமான விழாவிலே பார்த்திபன் கலந்து கொள்ள வருகிறார் என்றால் பத்திரிகையாளர்கள் நகரவே மாட்டார்கள், அவர் பேசும் வரை காத்திருப்பார்கள். ஏனென்றால், பத்திரிகைகள் மெல்வதற்கு அவர் வாயால் அவல் என்ன அல்வாவே கிடைக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘சைவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் விஜய் – அமலா பால் பற்றி பார்த்திபன் அவரது குறும்புத்தனமான பேச்சில் வெளிப்படுத்தியதாவது,

“திருவள்ளுவருக்கு அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் இந்த மூன்றும்தான் தெரியும். ஆனால், நம்ம இயக்குனர் விஜய்க்கோ அமலா பாலும் தெரியும்,” என பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசினார்.

சமீபத்தில்தான் தான் இயக்கி வரும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் அமலா பால், ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் காட்சிகளை பார்த்திபன் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு  முன்னதாக நடைபெற்ற விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பார்த்திபன் பேசும் போது கூட விஷால் – லட்சுமி மேனன் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டார்.

“இந்த படத்துல லட்சுமிகரமான குணம் படைத்த விஷால் அவர்களும், விசாலமான நெற்றி படைத்த லட்சுமி மேனன் அவர்களும் சேர்ந்து நடிக்கிறாங்க.

எனக்கு லேட்டஸ்ட்டா பிடிச்ச பதில் லட்சுமி மேனன்து.  ஒரு பத்திரிகையில படிச்சேன். (சார், அந்த  கேள்விய கேட்டதே நாங்கதானே சார்).

கேள்வி என்னன்னா, “நீங்க விஷாலைக் காதலிக்கிறீங்களா”ன்னு …கேக்கறாங்க.

அதுக்கு அவங்க பதில் ‘இல்லை…’

“அப்ப விஷால் உங்களைக் காதலிக்கிறாரா” – இது கேள்வி…

“தெரியாது” – இது லட்சுமி மேனன் பதில்…

இதைவிட புத்திசாலித்தனமான பதிலை நாம பார்க்கவே முடியாது, ” என விஷால் – லட்சுமி மேனன் பற்றி அன்று பார்த்திபன் பேசினார்.

பார்த்திபன், நேற்று (சில தினங்களுக்கு முன்) பேசியது காதல்தான் என்று காதலர்களில் ஒருவரான அமலா பால் மறுக்காத நிலையில், அன்று (சில வாரங்களுக்கு முன்) பேசியது காதல்தானா என்பதை சம்பந்தப்பட்ட விஷால் – லட்சுமி மேனன் விரைவில் அறிவிப்பார்களா ?

பார்ப்போம், பார்த்திப ராசி எப்படியிருக்கிறது என்று…. 🙂 🙂

Read Previous

இயக்குனர் விஜய்யுடன் திருமணமா ? – அமலாபால் அறிக்கை

Read Next

பரதமா ? கரகமா ? – பாலா படத்தின் கதை ?

Most Popular