இயக்குனர் பூபதிபாண்டியனிடம் உதவியாளராக பணியாற்றிய எல்.ஜி. ரவிச்சந்தர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’.இப்படத்தை ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பாக புஷ்பா கந்தசாமி, மோகன் தயாரிக்கிறார்கள்.
பரத், ‘அட்ட கத்தி’ நந்திதா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். பரத்தின் தந்தையாக ‘காதல்’ தண்ட பாணி, அம்மாவாக ரேணுகா நடிக்கிறார்கள். நாயகி நந்திதாவின் தந்தையாக தம்பி ராமையா கலக்குகிறார்.
நகைச்சுவைப் படமான இதில் வருகிற ஒவ்வொருவரும் சிரிக்க வைப்பார்கள். போதாக் குறைக்கு 18 நகைச்சுவை நடிகர்கள் நடித்து பட்டையைக் கிளப்புகிறார்கள்.
தம்பிராமையா, மனோபாலா, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, ‘சூதுகவ்வும்’ கருணா, கோவை செந்தில், சிசர் மனோகர், கிரேன் மனோகர், சுருளிம னோகர், முத்துக்காளை, நான் கடவுள் ராஜேந்திரன், கிளி ராமச்சந்திரன், ஜூனியர் பாலையா, பட்டுக்கோட்டை சிவநாராயண மூர்த்தி ஆகிய 18 நகைச்சுவை நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து, செல்வம் என்று எதுவும் சேர்த்து வைக்க வேண்டாம். நல்ல படிப்பைத்தேடிக் கொடுத்தால் போதும். அவர்கள் செல்வத்தை தேடிக் கொள்வார்கள். இக்கருத்தை வயிறு வலிக்கும் நகைச்சுவையுடன் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்தர்.
இப்பத்தின் கதையைக் கேட்ட கே.பாலசந்தர். இப்படிக் கூட கதை பண்ணுவார்களா என்று சிரித்து ரசித்துப் பாராட்டியுள்ளார்.சித்த மருத்துவ பரம்பரைப் பின்னணியில் அருமையான நகைச்சுவைக் கதையாக உள்ளதை அறிந்தவர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சித்த மருத்துவம் என்றதும் ஆண்மைக் குறைவு வைத்தியம் போன்ற மலிவானதாக கதை இருக்காது. ஆண்மைக் குறைவுக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் சித்த மருத்துவ தீர்வு உண்டு என்பதையும் உண்மையிலே சித்த மருத்துவம் சார்ந்து பல நல்ல செய்திகளையும் நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறார் ரவிச்சந்தர்.
கதை சேலம் மாவட்டத்தில் நடக்கிறது. சேலம், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 45 நாட்கள் திட்டமிடப்பட்டது. இதுவரை 25 நாட்கள் முடிந்துள்ளது. பாடல் காட்சிக்காக நெதர்லாந்து செல்ல இருக்கிறது படக்குழு.
ரஜினிகாந்த், பிராகாஷ்ராஜை அடுத்து பாலசந்தர் ஆசிபெற்ற கன்னட வரவாக அறிமுகம் ஆகிறார் கோமல் குமார். இந்த கோமல் குமார் தமிழில் வடிவேலு போல கன்னத்தில் காமெடி சூப்பர் ஸ்டார். கன்னட ‘சந்திரமுகி’யில் வடிவேலு பாத்திரத்தில் கலக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.க தை பிடித்துப் போய் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் தன் சொந்த செலவில் பெங்களூரிலிருந்து வந்து நடித்துக் கொடுத்து இருக்கிறார்.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்குப் பிறகு சைமன் இசையமைக்கும் படம் இது. யுகபாரதி 3 பாடல்களையும் கானாபாலா ஒரு பாடலையும் எழுதியுள்ளனர்
காங்கோ பாடகர் ஒருவருடன் கானாபாலாவுடன் இணைந்து பாடியுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஒரு பாடலை பாடியுள்ளார். நடிகராக இசையமைப்பாளராக பரபரப்பான சூழலிலும் பாடிக் கொடுத்துள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு பி.ஜி. முத்தையா, இவர் ‘பூ’ ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.
நடனம்– தினேஷ்– ஷோபி ஸ்டண்ட்- ஹரி. இவர் தளபதி தினேஷின் மகன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எல்.ஜி.ரவிச்சந்தர் தயாரிப்பு- புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன்.
விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு படக்குழு புறப்பட இருக்கிறது.
ஜூனில் வெளியிடும் நோக்கில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.