அமலா பால் நல்ல மனம் கொண்டவர் – இயக்குனர் விஜய்

director vijay actress amala paulஇயக்குனர் விஜய் – அமலா பால் காதல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழ்த் திரையுலகிலும், மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

தொடர்ந்து அமலா பால் மட்டுமே அவர்களது காதலைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் விரைவில் அறிவிக்கிறோம் என்றார்.

அதன் பின் கடந்த வாரம் இருவரும் மீடியாக்களை சந்திப்பதாகத் தகவல் வந்தது. ஆனால், இருவருமே சந்திக்கவில்லை. தற்போது இயக்குனர் விஜய் அனைத்து மீடியாக்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதில்,

“ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம்  கண்டேன்.

அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.

எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும்  நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது.

மீடியாக்களிடமிமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை.

மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.

அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும், நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்’ படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன்.

அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம், ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காதல் ஜோடிக்கு நமது வாழ்த்துகள்…

 

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

Read Next

என்னமோ நடக்குது – விமர்சனம்