2018ம் ஆண்டின் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்றாக சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘சீமராஜா’ படமும் இருக்கிறது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் இது.
இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 3ம் தேதி மதுரையில் ஒரு திருவிழாவாய் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக ஜுலை 25ம் தேதி ‘வாரேன் வாரேன் சீமராஜா’ என்ற பாடல் வெளியிடப்பட உள்ளது.
யுகபாரதி பாடல்களை எழுத, பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமந்தா நாயகியாக நடிக்க, சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, நெப்போலியன், லால், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘சீமராஜா’ படம் செப்டம்பர் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.