ரஜினியும் ‘ட்விட்டர்’-க்குள் வந்தார்….

rajinikanth twitterஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை உட்பட சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் உண்டு.

திரையுலகப் பிரபலங்கள் பலர் ட்விட்டரை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்றைய இளம் ஹீரோக்களா அஜித், விஜய், சூர்யா, விக்ரம், போன்றோர் இப்படியான எந்த சமூக வலைத்தளங்களிலும் இதுவரை வரவில்லை.

ஆனால், அவர்களுக்கு முன்னதாக ‘அகில உலகமே போற்றும் சூப்பர் ஸ்டார்’ இன்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் புது கணக்கை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நமக்கு செய்தி கிடைத்ததும் நாமும், ரஜினிகாந்தின் ட்விட்டர் கணக்கை பார்த்தோம். இது வரை எந்த ஒரு பதிவையும் ரஜினிகாந்த் போடாமலேயே அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மணித் துளிகளில் 13,000ஐத் தாண்டி விட்டது.

‘கோச்சடையான்’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள நிலையில் ட்விட்டரில் ரஜினிகாந்த் இணைந்திருப்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த்தின் ட்விட்டர் ஐடி….

https://twitter.com/superstarrajini

ரஜினிகாந்தின் வீடியோ பதிவு…

http://youtu.be/e7ElMJMeSJU

Read Previous

நீ எங்கே என் அன்பே – விமர்சனம்

Read Next

எனக்கு நானேதான் போட்டி – சந்தானம்