ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் இணைந்துள்ள படமான ‘லிங்கா’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
சுறுசுறுப்பான இயக்கத்திற்குப் பெயர் போனவரான கே.எஸ்.ரவிக்குமார், பரபரவென காட்சிகளைப் படமாக்கி திட்டமிட்டபடி முதல் கட்டப் படப்பிடிப்புகளை மைசூரில் முடித்துள்ளார்.
மே 2ம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
முதல் கட்டப் படப்பிடிப்பில் ஒரு நாயகியான சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டு நடித்துள்ளார். அடுத்த கட்டப் படப்பிடிப்பில் அனுஷ்கா கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
அடுத்ததாக ஹைதராபாத் அல்லது மும்பையில் படப்பிடிப்பு நடைபெறலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.