தனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி ? ஆச்சரியம்..ஆனால் உண்மை…

dhanush and vijay sethupathyசினிமாவில்தான் எது எப்போது நடக்கும் என்று சொல்லவே முடியாது. டிவியில் காம்பயராக இருந்த சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக வளர்த்து விட்டதில் பெரும் பங்கு தனுஷுக்குத்தான்.

அவரை மனைவி இயக்கத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பின்னர் நாயகனாகவும் நடிக்க வைத்து, மீண்டும் ஒரு படத்தையும் அவரை வைத்தே தயாரித்து வருகிறார் தனுஷ்.

தற்போது, தனுஷ் அடுத்து தயாரிக்கப் போகும் படத்தைப் பற்றி வந்த செய்திதான், அதிசயமான ஒரு செய்தி. ஆனால், உண்மையான செய்தியும் கூட.

தனுஷ் தயாரிப்பில் ‘வணக்கம் சென்னை’ படத்திற்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டி என திரையுலகமே பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் தயாரிக்கப் போகும் படம்தான் தற்போது கோடம்பாக்கத்தின் ‘ஹாட் டாபிக்’.

தனுஷ் நாயகனாக நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி என்பகு குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தோடு மேலும் சில படங்களையும் தயாரிக்கப் போகிறாராம் தனுஷ்.

 

Read Previous

‘கோச்சடையான்’ – ரஜினிகாந்த் ‘பன்ச்’ வசனங்கள்…

Read Next

‘கோச்சடையான்’ சம்பாதித்த 100 கோடி…