‘யூகன்’ – இயக்குனரான படத்தொகுப்பாளர்…

yooganதமிழ்த் திரையுலகில் நடிகர்கள் இயக்குனராவார்கள், தயாரிப்பாளர்கள் இயக்குனராவார்கள், ஒளிப்பதிவாளர் இயக்குனராவார்கள், ஆனால், படத் தொகுப்பாளராக இருப்பவர்களில் இயக்குனர்களாக மாறுபவர்கள் ஒரு சிலரே.

எடிட்டில் லெனின் போன்ற ஒரு சிலர்தான் அப்படி இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக கமல் இணைந்திருக்கிறார்.

படத்தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய இயக்குனர் கமல், ‘உ, ஒன்னும் புரியல’ போன்ற படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள கமல்.G. இயக்கத்தில் தயாராகியிருக்கும் பரபரப்பான திகில் படம் ‘யூகன்.’

மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் கணிப்பொறி காட்சிகளை நம்பாமல் ஒப்பனை மூலமே திகில் படுத்தும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி ஆறுமுகம் பிரபல ஒளிப்பதிவாளரான சக்தியிடம் பணியாற்றியவர்.

கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம் தமிழ் திரையுலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துமென இயக்குனர் கமல் தெரிவித்துள்ளார்.

 

Read Previous

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா…!!

Read Next

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…