‘வெயில், அங்காடித் தெரு’ ஆகிய வித்தியாசமான வெற்றிப் படங்களை இயக்கிய G. வசந்தபாலனின் அடுத்த படைப்பு ‘காவியத் தலைவன்’ .
சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷி காந்த் மற்றும் ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் இணைந்து தயாரிக்கிறார்கள். வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முறையாக இசையமைக்கிறார்.
‘காவியத் தலைவன்’ படத்தின் டீஸர் மற்றும் “வாங்க மக்கா வாங்க…” பாடலின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டு பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
நாளை ”வாங்க மக்கா வாங்க…” பாடல் itunes-ல் வெளியிடப்படவுள்ளது. நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்தப் பாடலை ஹரிசரண், DR.நாராயணன் பாடியுள்ளனர். சமீபத்தில் மறைந்த பிரபல நடன இயக்குனர் ரகுராம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
கேட்கத் தயாரா இருங்க மக்கா…
பாடல் இதோ…
ஓ ……..ஓ……….
செந்தமிழால இசையைகூட்டி பள பள பளவென கதை சொல்லுவோம்……
சந்திரன சாட்சி வெச்சி ஜெகதலபிரதாப கதை சொல்லுவோம்..
மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபா…
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
(சங்கதிகள்………………..
…………………………
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க பாட்ட கேக்க பாக்க வாங்க
பச்ச மஞ்சள் செவப்பு வெள்ள ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
பச்ச மஞ்சள் செவப்பு வெள்ள ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண
மாயம் காட்டுவோம் – நாங்க வானவில்ல
உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க பாட்ட கேக்க வாங்க
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி – நாங்க
தாங்குனத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி – நாங்க
தாங்குனத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்தக் காட்டுவோம் – உங்க
பகல் கனவ நனவாக மாத்துவோம்
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க —-சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க பாட்ட கேக்க வாங்க —-யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க
நீங்க வண்டி கட்டி வாங்க —-யக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க
நீங்க வரிஞ்சி கட்டி வாங்க —-ஐயா வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க —-சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க —-யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க