‘அஞ்சான்’ டீஸரை முந்தும் ‘அழகி’யின் டீஸர்…

suriya-and-sunny-leone‘அஞ்சான்’ படத்தின் டீஸர் ஒரே நாளில் பத்து லட்சம் யு டியூப் ஹிட்சைத் தாண்டியது என்று கோலாகலமாக விழா ஒன்றை கடந்த வாரம் எடுத்தார்கள்.

அட..தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு விழா நடத்தலாமா என பலரையும் ஆச்சரியப்படுத்திய (!) விழாவாக அது அமைந்தது. இந்த டீஸரின் வெற்றியின் மூலம்  படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதே சமயம் ‘அஞ்சான்’ டீஸர் வெளியானதற்கு சில நாட்களுக்கு முன் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள ‘பின்க் லிப்ஸ்’ என்ற பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ  ‘அஞ்சான்’ பட டீஸரை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இதன் மூலம் ‘அஞ்சான்’ டீஸரை, அழகி ‘சன்னி லியோன்’ முந்தி வருகிறார். ‘பின்க் லிப்ஸ்’ பாடல் வீடியோ  ‘ஹேட் ஸ்டோரி 2’ படத்தில் இடம் பெறுகிறது.

ஒரு சிறிய வியாபார கணக்கு. யு டியூப் ஹிட்ஸுக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் ‘கோலி சோடா, மஞ்சப் பை’ ஆகிய படங்கள் சில லட்சம் ஹிட்களை மட்டுமே பெற்றன. ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் சம்பாதித்துக் கொடுத்துள்ளன.

‘அஞ்சான்’ படத்தின் ஹிட்ஸ் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாகப் பார்த்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் வரும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். ‘அஞ்சான்’ படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும்.

பார்ப்போம்….நம் கணக்கு என்ன ஆகிறது என்று….

சன்னி லியோனியின் ‘பின்க் லிப்ஸ்’ பாடல் வீடியோ….

‘அஞ்சான்’ டீஸர் வீடியோ…

Read Previous

ஜுலை 18-ல் ‘வேலையில்லா பட்டதாரி’…

Read Next

யு டியூப் ஹிட்ஸ் – சந்தோஷப்பட ஒன்றுமில்லை… – வசந்தபாலன்

Most Popular