கமல்ஹாசன் நடிக்கும் புதுப்படம் விரைவில் ஆரம்பம்…

kamalhaasan at vaaliba rajaமலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற த்ரிஷ்யம் திரைப்படம் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக எப்போதோ தகவல்கள் வெளியானது. ஆனால், முறைப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போதுதான் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். கன்னடத்தில் இந்த படத்தை பி. வாசு இயக்கினார். தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். ஆனால் தமிழில் மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்குகிறார்.

கமல்ஹாசன் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜிப்ரான் இசையமைக்க நா.முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.

ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

Read Next

‘Purampokku’ Long Schedule Started…