தாய், பேய் பாசப் போராட்டம் ‘மூச்’

Mooch - Gallery_00005கிரேட் பி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படம் ‘மூச்’. இப்படத்தை வினு பாரதி இயக்குகிறார். நித்யன் கார்த்திக் இசையமைக்க நித்தின், மிஷா கோஷல், ஜெயராஜ், அபி, தியா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் வினுபாரதி,  இயக்குனர் பாரதிராஜாவிடம் இணைய இயக்குனராகப் பணிபுரிந்தவர். ‘மூச்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் ஒரு பேய் படம். பொதுவாக பேய் படம் என்றாலே த்ரில்லர் படமாகத்தான் இருக்கும். சமீப காலத்தில் கொஞ்சம் நகைச்சுவையான பேய்ப் படங்களும் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், இந்தப் படம் பாசத்தை மையமாகக் கொண்ட பேய் படம் என்கிறார் இயக்குனர் வினு பாரதி.

“எல்லாரும் பேயைக் காட்டி பயமுறுத்துவாங்க, ஆனால், நாங்க ஒரு பாசப் போராட்டத்தைச் சொல்லியிருக்கிறோம். இறந்து போன ஆத்மான்னாலே அது நல்லது செய்யாது, கெட்டது மட்டும்தான் செய்யும். ஒரு தாயை விட்டு பிரிந்து போன குழந்தைங்க, பேய் கஸ்டடில போகும் போது, அவங்க எதிர்காலம் எப்படி இருக்கும்கறதுதான் இந்த படத்தோட கதை.

சின்ன வயசுல இருந்தே பேய்னாலே எல்லாரும் பயமுறுத்துவாங்க. ஆனால், பேய்க்கும் பாசம் இருக்கும்கறத இந்தப் படத்துல சொல்லியிருக்கோம். நாங்க இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது தமிழ் சினிமாவுல பேய் படங்களே இல்லை. அப்புறம் நாங்க படத்தை ஆரம்பிச்ச பிறகு, நிறைய பேய் படம் வர ஆரம்பிச்சிடுச்சி.

இந்த படத்துல திகில் இருக்கு, பாசம் இருக்கு, கமர்ஷியல் இருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு ஒரு புது எக்ஸ்பிரீயன்ஸ் கிடைக்கும் ,” என்கிறார்   இயக்குனர் வினுபாரதி.

Read Previous

அஞ்சான் – ‘பார்த்திபன்’ இசை விமர்சனம்…

Read Next

‘விஜய்’ விருதுகளுக்குப் போட்டியாக அஜித்தின் ‘வீரம்’…

Most Popular