இப்படியும் ஒரு படம்…இதுதான் வித்தியாசமோ…?

Laddu Boondhi Boondhi_00001கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி”.

இந்தப் படத்தில் ஜீன்ஸ், கிரண்மை, லைவாசல் விஜய்,மகாநதி சங்கர்,ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார்.

இந்த படத்துல என்ன வித்தியாசம்னு கேக்கறீங்களா…அதாவது ஆண் நடிகர்கள் எல்லாம் பெண்களா நடிக்கிறாங்களா, பெண் நடிகர்கள் எல்லாம் ஆண்களா நடிக்கிறாங்களாம்…

உலக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் எடுக்கப்படுவது இதுவே முதன் முறை என்கிறார் இயக்குனர் . படத்தை இயக்கி நாயகனாகவும், ஸாரி…நாயகியாகவும் நடித்திருக்கும் ஜீன்ஸ் படத்தைப் பற்றிக் கூறியதாவது,

“லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்றால் லட்டுன்றது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு. அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம். இந்த ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்ற ஒருவனுடைய கனவுதான் இந்தப் படத்தின் கதை! அந்த கனவு உலகத்துல ஆண்கள் எல்லோரும் பெண்களா இருக்காங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களா இருக்காங்க. அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க.

அது போல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத் தனமா அடாவடியா இருப்பாங்க.  இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும்ங்கிறதை யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லிருக்கேன். நாம பார்த்த, ரசிச்ச, எல்லா விஷயங்களுமே அப்படியே மாறி நடந்தா எப்படி இருக்கும் என்று யோசிச்சு பாருங்க உங்களுக்கே சிரிப்பு வரும்.

இது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான முயற்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மொத்தம் 2 ½ மணி நேர படமும் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடுச்சு இதுவரைக்கும் எந்த படமும் வந்ததில்லை “ லட்டுக்குள்ள பூந்தி பூந்தி “ தான் முதல் படம் .

இது முழுக்க முழுக்க காமெடி படம். படத்தை பார்க்கிற ரசிகர்கள் எல்லோரும் வயிறு புண்ணாகும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க அதுக்கு நான் பொறுப்பு,”  என்று கூறுகிறார் இயக்குனர் ஜீன்ஸ்.

வித்தியாசமான படம், வித்தியாசமான படம்னு சொல்றாங்களே, இதுதான் வித்தியாசமான படமோ….?

 

 

Read Previous

வைரமுத்து பாடலை இளையராஜா கண்டிப்பாக பாட மாட்டார்…

Read Next

நம் கலாச்சாரத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும் – மலேசிய தயாரிப்பாளர் பேச்சு

Most Popular