‘சாஹசம்’ படத்திற்காக பிரஷாந்துடன் இணைந்த நர்கீஸ் பக்ரி…

Saahasam - nargis fakhri - prashanthநர்கீஸ் பக்ரி பிரபலமான ஹிந்திப் பட கதாநாயகி. இவர் ஏற்கனவே ரண்பீர் கபூருடன் மிகப் பெரிய வெற்றியடைந்த ‘ராக் ஸ்டார்’ என்னும் படத்திதல் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து ஜான் ஆபிரகாமுடன் ‘மெட்ராஸ் கபே’, ஹாகித் கபூருடன் ‘பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ’, வருண் தவானுடன் ‘மே தேரா ஹீரா’ ஆகிய படங்ககளில் கதாநாயகியாக நடித்தவர்.

ரம்ஜானுக்கு வெளியான சல்மான் கான் நடித்த ‘கிக்’ படத்தில் ஒரு முக்கியமான பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்காகவே படம் பார்க்க மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. ‘ஸ்பை’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நர்கீஸ் ‘சாஹஸம்’ படத்திற்காக புடாபெஸ்ட் நகரத்தில் இருந்து பிரஷாந்துடன் இணைந்து நடனமாட சென்னை வந்து தங்கியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக 50 ரஷ்ய அழகிகளுடனும், 100 ஆண் நடன கலைஞர்களுடனும் பிரஷாந்தும், நர்கீஸும் ஆடி வரும் பாடல் காட்சியை ராஜு சுந்தரம் நடன இயக்கத்தில், சௌந்தர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தமன் இசையில், கார்க்கி வைரமுத்து எழுதிய ‘காரத்தில் காரத்தில்…சில்லி இவ…’ என்ற பாடல் இதுவரை எடுக்கப்படாத விதத்தில் புதுவிதமாக பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் படமாகி வருகிறது. நடன அரங்கை ஆர்ட் டைரக்டர் மிலன் அமைத்துள்ளார்.

இந்த நடனத்திற்காகவே வித்தியாசமான லைட்டுகள் மும்பை, டெல்லி, பெங்களூர் நகரங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் ‘சாஹஸம்’ படத்தின் கதாநாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பெரும் பகுதி முடிந்து விட்ட ‘சாஹஸம்’ படத்தில் பிரஷாந்துடன் நாசர், துளசி, தேவதர்ஷினி, லீமா, தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், அபி சரவணன், ஜான் விஜய், மலேசியா அபிதா, ஹேமா ஆகியோருடன் வில்லன்களாக சோனு சூத், கோட்டா சீனிவாசராவ், ராவ் ரமேஷ், பெசன்ட் நகர் ரவி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இடம் பெற்றுள்ளது.

ஏராளமான பொருட்செலவில் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் நடிகர் தியாகராஜன் இப்படம் மூலம் அருண்ராஜ் வர்மா என்பரை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் நடன அரங்கில் பிரஷாந்தும், நர்கீஸ் பக்ரியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரஷாந்த், “நர்கீஸ் அற்புதமான நடிகை, எனக்கு ஈடுகொடுத்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். முதல் முறையாக தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ளார். என்னோடு இணைந்து நடித்துள்ள பல பிரபலங்களில் விசேஷமான பேரழகி இவர். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

நர்கீஸ் பேசியதாவது, “பிரஷாந்த் இனிமையானவர். தலை சிறந்த நடன நிபுணரான பிரஷாந்துடன் நடனமான எனக்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரிய படம், பிரம்மாண்டமான அரங்கம், தங்கமான மனிதர் தியாகராஜன் இவர்களுடன் இணைவது நான் செய்த பாக்கியம், நான் செய்த அதிர்ஷ்டம். இதுதான் தென்னிந்தியாவில் நான் ஆடும் முதலும் கடைசியுமான பாடல் காட்சி. இந்த பாடல் காட்சி நான் எதிர்பார்த்ததை விட பெரிதாக அமைந்துள்ளது. இதை எல்லா தரப்பு மக்களும் துள்ளிக் குதித்து ஆடுவார்கள். ராஜு சுந்தரம் நடன அமைப்புகள் எளிதாகவும், புதியதாகவும் உள்ளது, ” என்றார்.

Read Previous

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்….?

Read Next

‘ஜிகர்தண்டா’வைப் பாராட்டிய ஷங்கர்…