இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

baraniவரும் மாதங்களில் அடுத்தடுத்து பல படங்களில் ரிலீஸ் ஆகத் தயாராக உள்ள நிலையில் இன்று இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஜேஆர்பி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மாவணன் இயக்கத்தில் வசந்த் மோகன்ராஜ் இசையமைப்பில் விஜய் கதிர், உமாஸ்ரீ, ராஜபிரபு, லீலா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘பரணி’ படம் இன்று வெளியாகியுள்ளது.

ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் தயாரிப்பில் ஹரிகேசவா இயக்கத்தில் நித்யன் கார்த்திக் இசையமைப்பில் புதுமுகங்கள் நடித்துள்ள ‘அக்னி’ படமும் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் 15ம் தேதி “அஞ்சான், கதை திரைக்கதை வசனம் இயக்கம், சிநேகாவின் காதலர்கள்” படங்கள் வெளிவர உள்ளன. அதற்கும் அடுத்த வாரம் 22ம் தேதி படங்கள் வருமா என்பது சந்தேகம்தான், ஆனால் அதற்கும் அடுத்த வாரம் 29ம் தேதி விநாயக சதுர்த்தி வருவதால் அன்றைய தினங்கள் பல படங்கள் வெளிவர வாய்ப்புள்ளன.

இனி வரும் மாதங்களில் ஏறக்குறைய 100 படங்கள் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த 7 மாதங்களிலேயே வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துவிட்டதால், இந்த ஆண்டு வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தொட வாய்ப்புள்ளது.

Read Previous

‘அஞ்சான்’ வசூல் இலக்கு…150 கோடி…

Read Next

மாதவன் நடிக்கும் ‘இறுதிச் சுற்று’…