வடசென்னை, முத்தக் காட்சியில் மிரள வைத்த தனுஷ்

தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றாலே கமல்ஹாசன் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.

ஆனால், அதையும் மறக்கும் அளவிற்கு ‘வட சென்னை’ படத்தில் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் தனுஷ்.

இரு தினங்களுக்கு முன்பு வெளியான அந்த டீசரில் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனுஷ் தரும் அந்த முத்தம் பற்றித்தான் தற்போது திரையுலக ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

கமல்ஹாசனுக்குப் பிறகு சில ஹீரோக்கள் அவர்களது படங்களில் முத்தக் காட்சியில் நடித்திருந்தாலும் அதெல்லாம் பெரிதாகப் பேசப்படவில்லை.

ஆனால், டீசரில் இடம் பெற்ற தனுஷின் முத்தக் காட்சியே இப்படி பேச வைத்திருக்கிறது என்றால் படம் வந்த பின் அது எப்படி பேச வைக்குமோ ?.

டீசர் வெளியான அன்றே சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை கஸ்தூரியும், “வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் !” என கமெண்ட் செய்துள்ளார்.

கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்பில் மெனக்கெடுபவர்கள் என விக்ரம், சூர்யா போட்டி போட்டுக் கொண்டிருக்க, ஒரு முத்தத்தை வைத்தே அடுத்த கமல், தனுஷ் தான் என கஸ்தூரி கமெண்ட் செய்து, விக்ரம், சூர்யா ரசிகர்களை பதிலுக்கு கமெண்ட் செய்ய வைத்துவிட்டார்.

‘வட சென்னை’ படம் வெளிவந்த பின்னும் இந்த முத்தக் காட்சி பற்றிய பேச்சு மறையாமல் இருக்கும்.

Read Previous

‘கழுகு 2’ ஹிந்தி உரிமை 75 லட்சம் ?

Read Next

இசைக் கருவிகளை பயன்படுத்துங்கள் – இளையராஜா