தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பின் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ‘பூஜை’. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
தீபாவளியன்று வெளியாக உள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ருதி நடிக்கும் படம் என்பதாலோ என்னமோ பத்திரிகையாளர் சந்திப்புக்கும் நீண்ட தாமதத்திற்குப் பிறகுதான் வந்தார். விஷால் பேசிக் கொண்டிருக்கும் போது வந்தவர் அடுத்து மைக்கைப் பிடித்து சில வார்த்தைகள் மட்டுமே பேசி அமர்ந்து விட்டார்.
அதன் பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசன்,
“நான் ஒரு இந்திய நடிகை, எனக்கு தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால் தமிழில் மட்டுமே என்னால் அதிக கவனம் செலுத்த முடியாது. ‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பூஜை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் சில வாய்ப்புகள் வந்தாலும் தேதிகள் இல்லாததால் அந்தப் படங்களில் நடிக்கவில்லை,” என்றார்.
அதிக கிளாமராக நடிக்கிறீர்களே என ஒரு நிருபர் கேட்டதற்கு, “கிளாமர்னா என்ன…இன்னைக்கு வரைக்கும் அதுக்கு என்ன அர்த்தம் கொடுக்கறீங்கன்னு தெரியலை,” என்றார்.
‘கிளாமர்’னா என்னன்னு யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பா….