தீபாவளிக்குள் அஜித் பட தலைப்பு…

thala 55 title newsஎம்ஜிஆர் – சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் வரிசையில் கடந்த சில வருடங்களாகவே  அஜித் – விஜய் என்று அவர்களின் இரு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் அபிமான ரசிகர்களின் படங்களைப் பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

அதிலும் சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களே இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னாலும் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

இந்த ஆண்டு துவக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’, விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகி அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்தின.

ஆனால், தற்போது விஜய் ரசிகர்களுக்கு மட்டும்தான் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கப் போகிறது என அவருடைய ரசிகர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ஆனால், அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. பொங்கலுக்குத்தான் அஜித்தின் அடுத்த படம் வெளியாகப் போகிறது.

இருந்தாலும், அஜித் ரசிகர்கள் அஜித் படத்தின் டீஸவரையும், படத்தின் தலைப்பு அறிவிப்பையுமே தீபாவளி விருந்தாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே தங்களுக்குக் கொண்டாட்டம்தான் என்றும் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க அதற்கு முன்னதாகவே கூட அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்து விடலாம் என படத்தின் இயக்குனரும், அஜித்தும் முடிவு செய்துள்ளார்களாம்.

எனவே, தீபாவளிக்கு முன்பாகவே அஜித் படத்தின் தலைப்பு என்ன என்பதும், படத்தின் முதல் டீசரும் வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

Read Previous

‘இவனுக்கு தண்ணில கண்டம்’….படத்தோட பேருதான் இது…

Read Next

‘ஸ்ரீதேவி’ பட போஸ்டர்கள்…சட்டப்படி நடவடிக்கை – ராம்கோபால் வர்மா