லிங்கா – ரஜியின் இளமையான அசத்தல் ‘லுக்’…

linga rajinikanth santhanamகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தின் முதல் பார்வை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

அதன் பின் அந்தப் படத்தைப் பற்றிய வேறு எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. இப்போது ரஜினிகாந்தும், சந்தானமும் இடம் பெற்றுள்ள ஒரு புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

‘லிங்கா’ படத்தின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினியும், சந்தானமும் ஒரு தெருவில் பேசிக் கொண்டே நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். அதைப் பார்க்கும் அனைவருமே ஒரு 30 வயது இளைஞர்தான் அவர் என தாராளமாகச் சொல்வார்கள்.

அந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் ‘வைரலாகப்’ பரவி வருகிறது.

Read Previous

‘ஆக்கம்’ – சூழல்தான் மனிதனை மாற்றுகிறது…

Read Next

அஜித் ஒரு புரியாத புதிர்… – மீனா

Most Popular