‘களம்’ – கதைக் களத்தின் கதை…

Kalam - Gallery_00001அருள் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்கும் படம் ‘களம்’. “நான், அமர காவியம்’ படங்களை இயக்கிய ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ். ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஸ்ரீனி,அம்ஜெத், லக்ஷ்மி ப்ரியா, மது சூதனன் மற்றும் பேபி ஹியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சராசரி மனிதனின் கற்பனைக்கு எட்டாத உண்மைகள் தான் அமானுஷய்ம் என்று அழைக்கப்படும் . இந்த பாணியில் பல்வேறு படங்கள் வந்து கொண்டிருந்தாலும், இப்படத்தின் கதைக் களம் படத்தின் தரத்தை மெருகேற்றும். ‘களம்’ படத்தின் கதை ஒரு களத்தைப் பற்றிய கதை என்பதுதான் படத்தின் சிறப்பு. ஒரு விலை மதிப்பிட முடியாத குறிப்பிட்ட ஒரு மாளிகையை பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

Arri Alexa cooke S 4i என்ற அதி நவீன ஒளிப்பதிவு சாதனம் மூலம் இப்படத்தை படமாக்கி வருகிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ். பிரகாஷ் நிக்கி என்ற புதிய இசை அமைப்பாளர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சுபீஷ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

குறுகிய காலத் தயாரிப்பாக இப்படம் தயாராகி வருகிறது.

Read Previous

கமர்ஷியல் இயக்குனர் என்பது மகிழ்ச்சியே… – இயக்குனர் ஹரி

Read Next

விஜய் டிவியில் “நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே”…

Most Popular