‘வேலையில்லா பட்டதாரி’ படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தனுஷ் நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘அனேகன்’ படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் வித்தியாசமான கதையுடன் இப்படத்தை இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அவருடைய இசையில் உருவாகியுள்ள ஆறு பாடல்களில் ஒரு பாடலை தனுஷும் பாடியிருக்கிறார். இதற்கு முன் ‘இரண்டாம் உலகம்’ படத்திற்காக ஹாரிஸ் இசையில் தனுஷ் பாடியிருக்கிறார்.
தனுஷ் ஜோடியாக அமிரா தஸ்தூர் இப்படத்தில் அறிமுகமாகிறார், கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘அனேகன்’ படத்தின் டீஸர் தீபாவளியன்று வெளியாக உள்ளது. அதன் பின் படத்தின் இசை வெளியீடு, பட வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
இந்த ஆண்டிற்குள் ‘அனேகன்’ படம் வெளியாகி விடும்.