தமிழ், கன்னடத்தில் உருவாகும் ‘கரையோரம்’…

karaiooram poojai_00021 - Copyஆர்.ஜே.கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் ஆனந்த் மற்றும் ராமலிங்கையா இணைந்து தயாரிக்கும் படம் ‘கரையோரம்’. இப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகிறது.

ஜேகேஎஸ் இயக்கும் இந்தப் படம் த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிறது. தமிழில் ‘தலைவன், என்னமோ ஏதோ’ ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பல படங்களிலும் நடித்தவருமான நிகிஷா பட்டேல் நாயகியாக நடிக்கிறார். இனியா வில்லியாக நடிக்கிறார்.

கணேஷ் பிரசாத், வஷிஷ்டா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் மொத்தம் எட்டு பேர் மட்டுமே நடிக்கவுள்ளனர்.
காமெடிக்காக சிங்கம் புலி மற்றும் எம்.எஸ்.பாஸ்கரைச் சேர்த்துள்ளனர்.

சுஜித் ஷெட்டி இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜெய் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read Previous

Actress Padmapriya – Marriage…

Read Next

‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ – கலகல காமெடிப் படம்…