‘வாலு’ ரிலீஸ்…மீண்டும் தள்ளி வைப்பு…

Simbu, Hansika Motwani in Vaalu Movie Photosசிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க தமன் இசையைமப்பில் விஜயசந்தர் இயக்கி வரும் ‘வாலு’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படம் அடுத்த மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. “லிங்கா, ஐ” உட்பட பல படங்கள் தொடர்ந்து வெளிவருவதால் அந்தப் படங்களுக்குப் பிறகே ‘வாலு’ வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

“வாலு’ திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், படத்தைப் பார்த்த பிறகு அது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும் என்று தெரிந்தது.

இப்படத்தை நான் மிகப் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்தேன். எனவே, வினியோகஸ்தர்களும், திரையரங்கத்தினரும் படத்தை “லிங்கா, ஐ” படங்களுக்குப் பிறகு தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதை சிம்புவும் ஏற்றுக் கொண்டார்.

எனவே, படத்தை சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்தப் படம் என்னுடைய முந்தைய சாதனைகளைக் கண்டிப்பாக முறியடிக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ மீண்டும் தள்ளிப் போகிறது.

Read Previous

விமல், அஞ்சலி நடிக்கும் ‘மாப்ள சிங்கம்’…

Read Next

‘காவியத் தலைவன்’ – விஜய் பாராட்டு…சித்தார்த் மகிழ்ச்சி…